அபிஷேக் பானர்ஜி எம்.பி.முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.
மேற்கு வங்காளத்தில் மேலும் ஒரு திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தீபக் ஹல்தார் பா.ஜ.க.வில் சேர்ந்தார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் டயமண்ட் ஹார்பர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தீபக் ஹல்தார். திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட இவர் தற்போது பா.ஜனதாவில் சேர்ந்துள்ளார். இவர் 2 முறை மேல்சபை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தெற்கு பர்கானாவில் நடந்த பா.ஜ.க. கூட்டத்தில் அபிஷேக் பானர்ஜி எம்.பி. முன்னிலையில், பல்வேறு திரிணாமுல் காங்கிரஸ் பொறுப்பாளர்கள், தொண்டர்களுடன் இவர் பா.ஜனதாவில் இணைந்தார்.
ஆளும் கட்சியின் தலைவர்கள், மக்களுக்கு சேவையாற்றுவதை தடுப்பதாக குற்றம் சாட்டிய அவர், ஆளும்கட்சியில் இருந்து விலகுவதாக அவர் கூறி உள்ளார்.
ஏற்கனவே முன்னாள் மந்திரி மற்றும் 5 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.