ஒடிசாவில் சாலையில் வேன் கவிழ்ந்தது; 9 பேர் பலி

ஒடிசாவில் இருந்து சத்தீஷ்கார் சென்ற வேன் சாலையில் கவிழ்ந்ததில் 9 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2021-02-01 01:54 GMT
கோரபுத்,

ஒடிசாவின் சிந்திகுடா கிராமத்தில் இருந்து சிலர் சத்தீஷ்காரில் உள்ள குல்டா கிராமத்திற்கு செல்வதற்காக புறப்பட்டு வேன் ஒன்றில் பயணம் செய்துள்ளனர்.  அவர்களது வேன் கோரபுத் மாவட்டத்தின் கொத்புத் பகுதியருகே வந்தபொழுது திடீரென சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 9 பேர் பலியானார்கள்.  13 பேர் காயமடைந்தனர்.  இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்று அங்கிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்