விரைவு ரெயில்களில் பயணிகளுக்கு பக்கவாட்டு கீழ் படுக்கையில் புதிய வசதி அறிமுகம்-வீடியோ

விரைவு ரெயில்களில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக, பக்கவாட்டு கீழ் படுக்கையில் புதிய வசதியை ரெயில்வே அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.;

Update:2020-12-18 12:08 IST
புதுடெல்லி: 

பொதுமக்களைப் பொறுத்தவரை மற்ற ஏனைய போக்குவரத்தை விடவும் ரெயில் போக்குவரத்து மிகவும் வசதி. அதிலும் நீண்ட தூரப் போக்குவரத்துக்கு ரெயில் பயணம் தான் ஏற்றது.

அதிலும் கீழ் படுக்கை வசதி இருக்கையை முன்பதிவு செய்ய ரெயில் பயணிகளுக்கும் மிகவும் விருப்பம் உண்டு.  கீழ் படுக்கை வசதியை பெரும்பாலானோர் விரும்பினாலும்  ஒரு ரெயில் பெட்டியின் பக்கவாட்டு கீழ் படுக்கை வசதியை பலரும் விரும்புவதில்லை. முக்கியமாக அது  ஆர் ஏசிக்கு தான் ஒதுக்குவார்கள்.  அது இரு இருக்கைகளுடன் இருக்கும் ஒருவர் படுக்க விரும்பினால் அதனை இணைத்து படுத்து கொள்அவேண்டும்.

இதில் என்ன சிரமம் என்றால், இரண்டு தனித்தனி இருக்கைப் பகுதிகளை சேர்த்துப் போட்டு படுக்கும் போது, அதில் பிடிமானம் இல்லாததும், இரண்டு இருக்கைகளை ஒன்றாக சேர்க்கும் போது நடுவில் ஒரு சின்ன இடைவெளி இருப்பதும், அதனால் உடல் சமநிலையில் இல்லாமல் உறக்கம் வராமல் தவிப்பதுமே காரணமாக இருந்தது.

ஆனால், இந்த தவிப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதாவது, இரு இருக்கைகளை இணைத்துப் போட்டுவிட்டு, அதன் மேல் வேறொரு படுக்கை விரிப்பை போடும் வசதியை ரெயில்வே ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயலின் டுவிட்டர்  பக்கத்தில் வீடியோவுடன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்