பிரதமரை சந்திக்க தெலுங்கானா முதல்-மந்திரி டெல்லி பயணம்

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார்.

Update: 2020-12-12 02:54 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், நேற்று தனி விமானம் மூலம் ஐதராபாத்தில் இருந்து டெல்லி சென்றார். பிரதமர் மோடியையும், சில மத்திய மந்திரிகளையும் சந்தித்து மாநிலம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கிறார்.

வசந்த்விகார் பகுதியில், தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை பார்வையிடுகிறார். டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து, விவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்துகிறார். பின்னர், நாளை இரவிலோ அல்லது திங்கட்கிழமை காலையிலோ அவர் ஐதராபாத் திரும்புகிறார்.

மேலும் செய்திகள்