குஜராத் கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட ரூ.88 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் அழிப்பு

குஜாரத் மாநிலத்தில் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை வதோதரா போலீசார் அழித்தனர்.

Update: 2020-12-11 05:10 GMT
அகமதாபாத்,

குஜாரத் மாநிலத்தில் மது ஒழிப்பு அமலில் உள்ள நிலையில், கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வந்த ஆயிரக்கணக்கான மதுபான பாட்டில்களை போலிசார் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றை மொத்தமாக அழிக்க வதோதரா போலீசார் முடிவு செய்தனர்.

இதுவரை வெளிநாட்டு மதுபானங்கள், கள்ளச் சந்தையில் விற்கப்பட்ட மதுபானங்கள் என மொத்தம் 88 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 33 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த மதுபான பாட்டிகள் அனைத்தையும் ரோடு ரோலரைக் கொண்டு வதோதரா போலீசார் அழித்தனர்.

மேலும் செய்திகள்