மராட்டியத்தில் வணிக வளாகம் அருகே நள்ளிரவில் திடீர் தீ விபத்து

மராட்டியத்தின் தானே மாவட்டத்தில் தோஸ்தி வணிக வளாகத்தில் திடீரென நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது.;

Update:2020-12-06 02:42 IST
மும்பை,

மராட்டியத்தின் தானே மாவட்டத்தில் மும்ப்ரா நகரில் தோஸ்தி வணிக வளாகம் அமைந்துள்ளது.  இதனருகே பல கடைகள் அமைந்துள்ளன.  இந்த நிலையில், நள்ளிரவில் திடீரென இந்த கடைகளில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றிய தகவல் தீயணைப்பு நிலையங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.  இதனையடுத்து 2 தீயணைப்பு வாகனங்கள், 2 அதிவிரைவு பொறுப்பு வாகனங்கள் மற்றும் 2 தண்ணீர் டேங்கர்கள் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  நள்ளிரவு நேரத்தில் நடந்த இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.  உயிரிழப்புகளும் இல்லை.  தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை.  அதுபற்றி விசாரணை நடத்தப்பட உள்ளது.

மேலும் செய்திகள்