மராட்டிய மாநிலத்தில் இன்று 5,182 பேருக்கு கொரோனா

மராட்டிய மாநிலத்தில் இன்று 5,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-12-03 15:57 GMT
மும்பை,

மராட்டிய மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று ஒரே நாளில் 5,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,37,358 ஆக அதிகரித்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் இன்று 115 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 47,472 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 17,03,274 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது 85,535 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மராட்டிய மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்