நவம்பர் மாதமும் ஜிஎஸ்டி வரிவருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியது- மத்திய நிதி அமைச்சகம்
நவம்பர் மாதமும் ஜிஎஸ்டி வரிவருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.;
புதுடெல்லி
நவம்பர் மாத ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த 2019-ம் ஆண்டு நவம்பரில் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ. ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 491 கோடியாக இருந்த நிலையில் அதைவிட, 2020ம் ஆண்டு நவம்பரில் 1.4 சதவீதம் அதிகரித்து ரூ.1.04 லட்சம் கோடியாக ஏற்றம் கண்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில் இறக்குமதி பொருட்கள் மூலம் கிடைக்கும் வரி வருவாய் 4.9 சதவீதம் அதிகரித்துள்ளது, உள்நாட்டுபரிமாற்றம் மூலம் கிடைக்கும் வரிவருவாய் கடந்த ஆண்டு நவம்பரில் இருந்த வருவாயைவிட 0.5 சதவீதம் உயர்ந்துள்ளது
நவம்பர் மாதத்தில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 963 கோடி ரூபாய் வருவாய் கிடைத்tஹுள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பரில் கிடைத்த தொகையை காட்டிலும் 1.4 சதவீதம் அதிகம் நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரியாக ரூ.1,04,963 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது;. மொத்த வருவாயில் மத்திய ஜிஎஸ்டி மூலம் ஈட்டப்பட்ட 19 ஆயிரத்து 189 கோடியும், மாநில ஜிஎஸ்டி மூலம் ஈட்டப்பட்ட 25,540 கோடி ரூபாயும், ஒன்றிணைந்த ஜிஎஸ்டி மூலம் ஈட்டப்பட்ட 51,992 கோடி ரூபாயும், செஸ் மூலம் ஈட்டப்பட்ட 8,242 கோடி ரூபாயும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.