பீகார் சட்டசபை தேர்தல்; வெற்றி பெற்ற 20 தொகுதி நிலவரம் அறிவிப்பு

பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் தலா 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

Update: 2020-11-10 13:29 GMT
பாட்னா,

பீகார் சட்டசபைக்கான தேர்தல் கடந்த அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய நாட்களில் 3 கட்டங்களாக நடந்து முடிந்தது.  மொத்தம் 243 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் ஆட்சி அமைக்க 122 உறுப்பினர்கள் தேவை.

இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த சூழலில் தேர்தல் ஆணையம் 20 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் நிலவரம் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

இவற்றில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க. 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  இதேபோன்று மகாகட்பந்தன் கூட்டணியில் உள்ள ராஷ்டீரிய ஜனதா தளம் 6 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.  இதுதவிர ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் வி.ஐ.பி. ஆகிய கட்சிகள் தலா 2 தொகுதிகளிலும், சி.பி.ஐ. (எம்) மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.

மேலும் செய்திகள்