டெல்லியில் 2-வது நாளாக 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளது.

Update: 2020-11-04 16:22 GMT
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெல்லியில் கொரோனா வைரஸ் பரவலின் 3-வது அலை வீசுகிறதோ? என நினைக்கத்தோன்றுகிறது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கூறியிருந்தார். கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளையும் டெல்லி அரசு முடுக்கி விட்டுள்ளது. 

இந்த நிலையில், டெல்லியில் 2-வது நாளாக இன்று தொற்று பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டி பதிவாகியுள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 6,842- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொற்று பாதிப்பில் இருந்து 5,797- பேர் குணம் அடைந்த நிலையில், 51 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  4,09,938 - ஆக உயர்ந்துள்ளது.  தொற்று பாதிப்புடன்   37,369- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் செய்திகள்