லடாக் பகுதியில் 2 முறை தொடர் நிலநடுக்கம்

லடாக் பகுதியில் நேற்று இரவு 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.;

Update:2020-11-01 02:48 IST
லடாக்,

காஷ்மீரில் உள்ள லடாக் பகுதியில் நேற்று இரவு 10.29 மணிக்கு ரிக்டர் 4.1 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் இரவு 11.36 மணிக்கு மீண்டும் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

இரண்டாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியிருப்பதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று மத்திய பிரதேசத்தின் சியோனி மாவட்டத்திலும் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்