பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டோம்: ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு

பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டோம் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

Update: 2020-10-09 14:38 GMT
புதுடெல்லி,

பீகார் மாநிலத்தில் அக்டோபர்  28 தொடங்கி  நவம்பர் 7 வரை 3 கட்டமாக  சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையில் ஆளும்  தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மஹாகட்பந்தன் கூட்டணி போட்டியிடுகிறது. 

மொத்தம் 243 இடங்களை கொண்ட பீகார் சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற 122 இடங்கள் தேவைப்படுகிறது.  நிதீஷ் குமார்  தலைமையிலான ஐக்கிய ஜனாத தளம், லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம், பாஜக, காங்கிரஸ் ஆகியவை முக்கிய கட்சிகள் ஆகும்.  

இந்த நிலையில், பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவது இல்லை என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஒப்புதல் பெற்று இந்த அறிவிப்பை வெளியிடுவதாக பீகார் மாநில ஆம் ஆத்மி தலைவர் சுஷில் குமார் சிங் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்