இந்தியாவில் 24 போலி பல்கலைக்கழகங்கள் - யு.ஜி.சி. அறிவிப்பு

இந்தியாவில் 24 பல்கலைக்கழகங்கள் அங்கீகரிக்கப்படாத போலி பல்கலைக்கழகங்களாக செயல்படுவதாக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) அறிவித்துள்ளது.;

Update:2020-10-08 06:50 IST
புதுடெல்லி, 

இந்தியாவில் 24 பல்கலைக்கழகங்கள் அங்கீகரிக்கப்படாத போலி பல்கலைக்கழகங்களாக செயல்படுவதாக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) அறிவித்துள்ளது.

நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் போலி பல்கலைக்கழகங்களை கொண்ட மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. அங்கு 8 போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன. டெல்லியில் 7, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 2, கர்நாடகம், கேரளா, மராட்டியம், புதுச்சேரி, மராட்டியம் ஆகியவை தலா ஒரு போலி பல்கலைக்கழகத்தை கொண்டுள்ளன.

இதுபற்றி பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் ரஜினிஷ் ஜெயின் கூறுகையில், “யு.ஜி.சி. சட்டத்துக்கு முரணாக தற்போது 24 சுயபாணி, அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் செயல்பட்டுவருவது மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரியப்படுத்தப்படுகிறது. இவை போலி பல்கலைக்கழகங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இவை எந்த பட்டத்தையும் வழங்க அதிகாரம் இல்லை” என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்