இந்தியாவில் 60% பேருக்கு கொரோனா பரப்பிய 8 சதவீதத்தினர்

இந்தியாவில் பாதிக்கப்பட்ட 8 சதவீதத்தினர் மூலம் மட்டுமே 60 சதவிகிதம் பேருக்கு கொரோனா பரவியதாகவும் கூறப்பட்டுள்ளது.

Update: 2020-10-03 04:07 GMT
புதுடெல்லி

கொரோனா பெருந்தொற்று தொடர்பாக 5 லட்சம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் சயின்ஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளான 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் மூலம் யாருக்கும் தொற்று பரவவில்லை என்றும், பாதிக்கப்பட்ட 8 சதவீதத்தினர் மூலம் மட்டுமே 60 சதவிகிதம் பேருக்கு கொரோனா பரவியதாகவும் கூறப்பட்டுள்ளது.

பெரியவர்களை விட 14 வயதுக்குட்பட்டவர்கள்தான் அதிகளவில் சம வயதுள்ளவர்களுக்கு தொற்றை பரப்புவதாகவும் கொரோனாவால் இறந்தவர்களில் 45 சதவிகிதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகம், ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பேருந்து, ரெயில் பயணங்கள் கொரோனா பரவ அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களிலும் தொற்றால் இறப்பவர்கள் சராசரியாக 5 நாட்கள் வரை மருத்துவமனையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்