ஆந்திராவில் இன்று ஒரேநாளில் 7,297 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்

ஆந்திராவில் இன்று ஒரேநாளில் 7,297 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Update: 2020-10-01 13:48 GMT
அமராவதி,

ஆந்திர மாநிலத்தில் கடந்தி சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு மிக அதிக எண்ணிக்கையில் கண்டறியப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 6,751 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,00,235 ஆக அதிகரித்துள்ளது. 

இன்று ஒரேநாளில்  கொரோனாவால் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 5,869 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திரா முழுவதும் இன்று ஒரேநாளில் 7,297 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,36,508 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் தற்போது வரை 57,858 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்