எல்லையில் படைகளை குவிப்பதை நிறுத்த முடிவு: இந்தியா-சீனா கூட்டு அறிக்கை வெளியீடு
எல்லையில் படைகளை குவிப்பதை நிறுத்த இந்தியா-சீனா ராணுவ தளபதிகள் மட்டத்திலான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கிழக்கு லடாக் எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் வகையில், இந்திய மற்றும் சீனா ராணுவ மூத்த தளபதிகள், 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து இருநாட்டு அரசும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், எல்லைக்கு. அதிகமான துருப்புக்களை அனுப்புவதை நிறுத்த இருநாட்டு தளபதிகளின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலைமையை சிக்கலாக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் தவிர்க்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே, தகவல் தொடர்புகளை வலுப்படுத்தவும், தவறான புரிதல்கள் மற்றும் முன் முடிவுகளை தவிர்க்கவும், இரு நாடுகளின் தலைவர்களும் எட்டிய முக்கியமான ஒருமித்த கருத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.