புதிய இந்தியாவின் தேவைக்கு ஏற்ப கல்விக்கொள்கையை அமைத்திருக்கிறோம்- பிரதமர் மோடி

பழைய கல்வி கொள்கையை மாற்றுவது மிகவும் அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Update: 2020-09-11 05:54 GMT
புதுடெல்லி,

புதிய கல்வி கொள்கை தொடர்பான மாநாட்டில், '21ஆம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி' எனும் தலைப்பில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார்.  பிரதமர் மோடி பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-  
  • கடந்த  30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் மாற்றம் நிகழந்துள்ள நிலையில் நமது கல்வி முறை மாறவில்லை. 
  • புதிய கல்விக்கொள்கைக்காக 5 ஆண்டுகள் உழைத்தும் இன்னும் பணி  முடியவில்லை.
  • புதிய இந்தியா, புதிய எதிர்பார்ப்பு ஆகியவற்றை புதிய கல்விக்கொள்கை பூர்த்தி செய்யும். 
  • புதிய கல்விக்கொள்கை செயல்படுத்த அனைவரும் ஒருங்கிணைய வேண்டும். 
  • பழைய கல்வி கொள்கையை மாற்றுவது மிகவும் அவசியம்
  • புதிய கல்விக் கொள்கையின் மூலம் புதிய யுகத்தை நிர்மாணிப்பதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது
  • 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை
  • பழைய கல்வி கொள்கை மாற்றுவது மிகவும் அவசியமானதாக இருக்கிறது
  • புதிய இந்தியாவின் தேவைக்கு ஏற்ப கல்விக்கொள்கையை அமைத்திருக்கிறோம்
  • புதிய கல்விக்கொள்கைக்காக இரவு பகலாக உழைப்பு தரப்பட்டுள்ளது
  • புதிய கல்விக்கொள்கை குறித்து பல கேள்விகள் எழும்
  • வெற்றிகரமாக செயல்படுத்த என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி அவசியம்
இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்