முல்லை பெரியாறு அணை வழக்கில் இருந்து விலகுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே அறிவிப்பு

முல்லை பெரியாறு அணை வழக்கில் இருந்து விலகுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே அறிவித்துள்ளார்.

Update: 2020-09-09 07:51 GMT
சென்னை,

முல்லைப் பெரியாறு  அணை வழக்கில் இருந்து விலகுவதாக உச்ச நீதிமன்ற   தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே அறிவித்துள்ளார்.  

"அணை மேற்பார்வை குழுவால் ஏற்படுத்தப்பட்ட  துணைக்குழுவை கலைக்க கோரிய மனு மீதான விசாரணைகளில் இருந்து விலகுகிறேன்.தனது சகோதரர் இந்த வழக்கில் வழக்கறிஞராக ஆஜராகி இருப்பதால் விலகிக் கொள்கிறேன்" என  தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தெரிவித்துள்ளார். 

அணை மேற்பார்வை குழுவால் ஏற்படுத்தப்பட்ட  துணைக்குழுவை கலைக்க கோரிய  மனுவை நீதிபதி ஆர்.எஃப். நரிமன் தலைமையிலான அமர்வு விசாரிக்கும் எனவும் எஸ்.ஏ பாப்டே தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்