அரியானா காங்கிரஸ் எம்.பி.க்கு கொரோனா பாதிப்பு

அரியானா காங்கிரஸ் எம்.பி தீபேந்திர சிங் ஹூடாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-09-06 11:14 GMT
சண்டிகர்,

இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொற்றால் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் என மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்த நிலையில், அரியானா காங்கிரஸ் எம்.பி தீபேந்திர சிங் ஹூடாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி தீபேந்திர சிங் ஹூடா, “ ''எனக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் எனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மருத்துவர்களின் அறிவுரைகளின்படி மற்றம் பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகு தனிமைப்படுத்திக்கொண்டேன். அனைவரது ஆசிர்வாதத்தாலும் சீக்கிரம் குணமடைந்து திரும்புவேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ பரிசோதனை செய்துகொண்டு தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்''

இதற்கு முன்னர் அரியானா மாநில முதல்வர் மனோகர் லா கட்டாருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்