நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் வாங்கி கொடுத்ததாக வீட்டு மேலாளர் ஒப்புகொண்டார்

நடிகர் சுஷாந்த் சிங் போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தினார் என சாமுவேல் மிராண்டா தேசிய போதைபொருள் தடுப்பு போலீசாரிடம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

Update: 2020-09-05 05:22 GMT
மும்பை

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிராண்டா, மறைந்த நடிகருக்கு போதைப்பொருள் வாங்கி கொடுத்ததாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு போலீசாரிடம்  (என்சிபி) ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் விசாரணை தொடர்பாக ஷோயிக் சக்ரவர்த்தி மற்றும் சாமுவேல் மிராண்டா ஆகியோரை போதைப்பொருள் தடுப்பு போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிராண்டா,  நடிகருக்கு போதைப்பொருள் வாங்கி கொடுத்ததாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு போலீசாரிடம்  (என்சிபி) ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

ஷோயிக் மற்றும் சாமுவேல் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

இருவருக்கும் எதிராக போதை தடுப்பு போலீசார் பலவேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்

மும்பையில் ஷோயிக் சக்ரவர்த்தி மற்றும் மறைந்த நடிகரின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிராண்டா ஆகியோரின் வீடுகளில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் சோதனைகளை மேற்கொண்டனர். .

ரியா மற்றும் ஸ்ருதி மோடி, மிராண்டா மற்றும் பிதானி இடையே வாட்ஸ்அப் செய்திகள் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.




மேலும் செய்திகள்