கவர்னர் கிரண்பெடி மாற்றமா?

புதுச்சேரி மாநிலத்தின் கவர்னராக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண்பெடி பதவி வகித்து வருகிறார்.;

Update:2020-07-26 06:18 IST
புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தின் கவர்னராக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண்பெடி பதவி வகித்து வருகிறார். அவர் விரைவில் மாற்றப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வைரலாக பரவி வருகின்றன. அவர் மத்திய மந்திரியாக நியமிக்கப்படலாம் என்றும் கருத்து பதிவிடப்பட்டு வருகிறது. கவர்னர் கிரண்பெடி மாற்றப்பட்டால் புதுச்சேரி மாநில புதிய கவர்னராக தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. இல.கணேசன் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி முன்னாள் மத்திய மந்திரி புரந்தேஸ்வரி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான கேரளாவை சேர்ந்த குனியில் கைலாசநாதன் ஆகியோரது பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் உலா வந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

மேலும் செய்திகள்