சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்

சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.

Update: 2020-07-24 06:25 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்குள் நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா காலத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் எப்படி இருக்க வேண்டும் என மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-

* சுதந்திர தினத்தின் போது பெரிய அளவிற்கு மக்கள் கூடுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்.

* தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுதந்திர தினத்தை கொண்டாடவும் அறிவுறுத்தல்

* கொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்க வேண்டும் மற்றும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களையும் கவுரவிக்கும் விதமாக விழாவிற்கு அழைக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்