கடந்த 24மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை எட்டி உள்ளது

கடந்த 24மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை எட்டி உள்ளது. மொத்த பாதிப்பு 13 லட்சத்தை நெருங்குகிறது.

Update: 2020-07-24 04:41 GMT
புதுடெல்லி

24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50,000 யை நெருங்கி உள்ளது. கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13 லட்சத்தை நெருங்குகிறது; இறப்பு எண்ணிக்கை 30,000 க்கு மேல் உள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்  வெளியிட்டு உள்ள தகவலில்  

கடந்த 24 மணி நேரத்தில் 49,310 கொரோனா பாதிப்புகள் மற்றும் 740 இறப்புகள் பதிவாகி உள்ளது. இந்தியாவில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,87,945 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 30,601 ஆக உயர்ந்துள்ளது.

மொத்த பாதிப்புகளில், 8,17,208 பேர் வெற்றிகரமாக குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.  இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 4,40,135 சிகிச்சை பெற்று வருகின்றனர் என கூறப்பட்டு உள்ளது

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மராட்டிய மாநிலம் தொடர்ந்து மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.5 லட்சமாக உள்ளது. .

1,92,964 கொரோனா பாதிப்புகள் மற்றும் 3,232 இறப்புகளுடன் தமிழ்நாடு நாட்டில் இரண்டாவது  இடத்தில் உள்ளது. 1,27,364 உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் மற்றும் 3,745 இறப்புகள் பதிவாகியுள்ள  டெல்லி மூன்றாவது இடத்தில் உள்ளது, கர்நாடகா (80,863 பாதிப்புகள், 1,616 இறப்புகள்) மற்றும் ஆந்திரா (72,711 பாதிப்புகள் மற்றும் 884 இறப்புகள்) உள்ளன.

மேலும் செய்திகள்