இமாசல பிரதேசத்தின் புதிய பாஜக தலைவர் நியமனம்
இமாசல பிரதேசத்தின் புதிய பாஜக தலைவராக சுரேஷ் காஷ்யப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.;
சிம்லா,
இமாசல பிரதேசத்தின் புதிய பாஜக தலைவராக சிம்லா மக்களவை உறுப்பினா் சுரேஷ் காஷ்யப் நியமிக்கப்பட்டுள்ளதாக பாஜக மூத்த நிர்வாகி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக தேசிய பொதுச் செயலரும், தலைமையக பொறுப்பாளருமான அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இமாசல பிரதேசத்தின் மாநில பாஜக தலைவராக சுரேஷ் காஷ்யப்பை தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா நியமனம் செய்துள்ளதாக தெரிவித்தார். சுகாதார மோசடி தொடா்பான விசாரணையை எதிர்கொள்ளும் வகையில் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ராஜீவ் பிண்டல் தனது பதவியை ராஜிநாமா செய்திருந்தார்.
கடந்த சில வாரங்களாக அப்பதவி காலியாக இருந்த நிலையில் சுரேஷ் காஷ்யப் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.