இந்தியா ஐடியா மாநாட்டில் பிரதமர் இன்று உரை

அமெரிக்கா-இந்தியா வர்த்தக கவுன்சில் சார்பில் இந்தியா ஐடியா உச்சி மாநாடு இன்று இணையவழியில் நடைபெறுகிறது.

Update: 2020-07-21 23:28 GMT
புதுடெல்லி,

அமெரிக்கா-இந்தியா வர்த்தக கவுன்சில் சார்பில் இந்தியா ஐடியா உச்சி மாநாடு இன்று இணையவழியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இதில், இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பு பற்றியும், கொரோனாவுக்கு பிறகு இருநாட்டு உறவு குறித்தும் விவாதிக்கப்படுகிறது. ‘சிறப்பான எதிர்காலத்தை உருவாக்குவோம்‘ என்ற பொருளில் மாநாடு நடக்கிறது. மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ ஆகியோரும் பேசுகிறார்கள்.

மேலும் செய்திகள்