மேற்குவங்காள பாஜக எம்எல்ஏ தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்பு; கொலை என குற்றச்சாட்டு
மேற்குவங்காள பாஜக எம்எல்ஏ தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்,கொலை என குற்றஞ்சாட்டப்படுகிறது.
கொல்கத்தா
மேற்குவங்காள மாநிலம் ஹெமதாபாத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ தேபேந்திர நாத் ரே. இவர் தனது வீட்டிலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மார்க்கெட் பகுதியில் உள்ள கடை அருகில் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இறந்த எம்எல்ஏவின் குடும்பத்தினர் கூறும்போது, நேற்று நள்ளிரவு 1 மணியளவில் சில நபர்கள் வீட்டிற்கு வந்த எம்எல்ஏவை அழைத்துச் சென்றுதாக கூறியுள்ளனர்.
இதனிடையே எம்எல்ஏ தேபேந்திர நாத் தற்கொலை செய்யவில்லை எனவும், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக விரிவான விசாரணை வேண்டும் எனவும் பாஜக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பா.ஜனதா தேசியத்தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டு உள்ள டுவிட்டில்
மேற்கு வங்காளத்தின் ஹெமதாபாத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ தேபேந்திர நாத் ரே படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இது மம்தா அரசின் சட்டம் ஒழுங்கின் தோல்வி குறுத்து காடுகிறது என கூறி உள்ளார்.