ராஜஸ்தான் விவகாரம்: கட்சியை நினைத்து வருத்தப்படுகிறேன் - கபில் சிபல்
கட்சியை நினைத்து கவலைப்படுகிறேன் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ராஜஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மாநில சட்டசபையில் மொத்தமுள்ள 200 இடங்களில் தற்போது 107 உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் நிலையில் சில சுயேச்சைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போன்ற சில கட்சிகளும் காங்கிரசுக்கு ஆதரவு அளித்து உள்ளன.
காங்கிரஸ் வெற்றி பெற்ற போதும், அங்கு முதல்-மந்திரி பதவியை பெறுவதில் மூத்த தலைவர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே போட்டி நிலவியது. எனினும் அசோக் கெலாட்டை கட்சி மேலிடம் முதல்-மந்திரியாக்கியது. சச்சின் பைலட்டுக்கு துணை முதல்-மந்திரி பதவி கிடைத்தது. இதனால் இருவருக்கும் இடையே தொடர்ந்து அதிருப்தி நிலவி வருகிறது.
இதனிடையே ராஜஸ்தான் மாநில துணை முதல்-மந்திரியாக இருக்கும் சச்சின் பைலடன் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 25 பேருடன் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் கபில் சிபல் இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், நமது கட்சியை நினைத்து கவலைப்படுகிறேன். குதிரைகள் அனைத்தும் வெளியேறிய பிறகு தான் நாம் கவலைப்படுவோமா? என வருத்ததுடன் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கபில் சிபில் டுவீட் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Worried for our party
— Kapil Sibal (@KapilSibal) July 12, 2020
Will we wake up only after the horses have bolted from our stables ?