தெலுங்கானாவில் மேலும் 1,278 பேருக்கு கொரோனா பாதிப்பு
தெலுங்கானாவில் இன்று மேலும் 1,278 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.;
ஹைதராபாத்,
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. தெலுங்கானாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தெலுங்கானாவில் இன்று புதிதாக 1,278 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 32,224 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் இன்று மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 339 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரேநாளில் 1,019 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 19,205 ஆக உயர்ந்துள்ளது. .தற்போது வரை 12,680 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.