சஞ்சய் லீலா பன்சாலியின் படங்களில் கால்ஷீட் பிரச்சினையால் தான் சுஷாந்த் சிங்கால் நடிக்க முடியவில்லை; போலீசார் தகவல்

பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (வயது34) கடந்த மாதம் 14-ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-07-08 01:14 GMT

மும்பை,

பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (வயது34) கடந்த மாதம் 14-ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ெதாழில்போட்டி காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால் நடிகர் தற்கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக போலீசார் நடிகரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக நடிகர்கள் என 34 பேரிடம் விசாரணை நடத்தி இருந்தனர். இதில் நேற்று முன்தினம் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவம் தொடா்பாக பிரபல இயக்குனா் சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் கால்ஷீட் பிரச்சினையால் தான் நடிகர் சுஷாந்த் சிங் சஞ்சய் லீலா பன்சாலியின் 4 படங்களில் நடிக்க முடியாமல் போனதாக போலீசார் கூறியுள்ளனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘விசாரணையில் சஞ்சய் லீலா பன்சாலியின் படத்தில் அவர் நடிக்க கேட்ட சமயத்தில் நடிகர் சுஷாந்த் சிங்கால் தான் நேரம் கொடுக்க முடியவில்லை என்பது தெரியவந்து உள்ளது’’ என்றார்.

மேலும் செய்திகள்