இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15,413 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
உலகம் முழுவதும் தினந்தோறும் லட்சக்கணக்கானோரை பாதிப்புக்கு உள்ளாக்கியும், ஆயிரக்கணக்கானோரின் உயிரையும் காவு வாங்கி கொண்டிருக்கும் கொரோனா, தனது ஆட்டத்தை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த வைரசின் பிடியில் இந்தியாவும் சிக்கியுள்ளது.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 306 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் இந்த வைரஸ் தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 254 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் பாதிப்பிலும் கொரோனா புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை இல்லாத அளவில் புதிதாக 15 ஆயிரத்து 413 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 10 ஆயிரத்து 461 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,27,756 பேர் குணமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாநிலம் வாரியாக கொரோனா தொற்று மொத்த எண்ணிக்கை :-
மராட்டியம் - 1,28,205
தமிழ்நாடு - 56,845
டெல்லி - 56,746
குஜராத் - 26,680
ராஜஸ்தான் - 14,536
உத்தர பிரதேசம் - 16,594
மத்திய பிரதேசம் - 11,724
மேற்குவங்காளம் - 13,531
தெலங்கானா - 7,072
கர்நாடகா - 8,697