டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், கடந்த திங்களன்று காய்ச்சல் காரணமாக டெல்லியில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அவருக்கு காய்ச்சல் அதிகமானதையடுத்து, மூச்சுத்திணறலும் ஏற்பட்டதால் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவருக்கு கொரோனாவிற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மற்றொரு நபரான அதிஷி, தனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.
சத்யேந்திர ஜெயின் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று டெல்லியில் கொரோனா பாதிப்பு குறித்து நிகழ்ந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.