கேரளாவில் மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று

கேரளாவில் மேலும் 57 பேருக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-01 15:04 GMT
திருவனந்தபுரம்,

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நோய் பரவுதலை கட்டுக்குள் வைக்க பல்வேறு மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டாலும், அதில் கேரளா முன்னிலையில் உள்ளது. கேரளாவில் எடுக்கப்பட்ட பல்வேறு கட்ட நடவடிக்கைகளால் நோய் தொற்றுகளின் விகிதம் சராசரியாக குறைந்து பாராட்டையும் பெற்றது.

இந்தநிலையில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கேரள மாநிலத்தில் மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஒருவர் உயிரிழந்தார். வெளிநாடுகளில் இருந்து வந்த 28 பேர், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 37 பேர் உட்பட 57 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 708 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்