சாலை விபத்தில் பலியாகும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்: மராட்டியத்தில் சரக்கு வாகனம் மீது பேருந்து மோதி விபத்து; 4 பேர் பலி

மராட்டியத்தில் சரக்கு வாகனம் மீது பேருந்து மோதி செவ்வாய்க்கிழமை (19-ம் தேதி) விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்தில் பயணம் செய்த புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் 3 பேர் பேருந்து ஒட்டுநா் உள்பட 4 பேர் உயிரிழந்தனா்.;

Update:2020-05-19 23:51 IST
மும்பை,

இந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.  இதன் ஒரு பகுதியாக நாட்டில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.  எனினும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.  பொதுமக்கள் ஊரடங்கு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.  எனினும், கடந்த 4ந்தேதியில் இருந்து நாடு முழுவதும் பல இடங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், வேலையிழந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பி வருகின்றனர். பொது போக்குவரத்து முடக்கப்பட்டதால், பல நூறு கி.மீட்டர்களுக்கு நடந்தே பல தொழிலாளர்கள் சென்றதைக் காண முடிந்தது. அதேபோல், டிரக்குகள் போன்ற சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மராட்டியத்தில் உள்ள யவத்மால் மாவட்டத்தில் சரக்கு வாகனம் மீது பேருந்து மோதி  விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்தில் பயணித்த புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் 3 பேர் பேருந்து ஒட்டுநா் உள்பட 4 பேர் உயிரிழந்தனா். 15 போ காயமடைந்தனா்.

இதுகுறித்து அந்த மாநில காவல்துறையினா் கூறுகையில், 'ஜார்க்கண்டை சோந்த புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சிலா், சிறப்பு ரெயில் மூலம் சொந்த மாநிலம் திரும்ப சோலாபூரில் இருந்து நாக்பூா் ரெயில் நிலையத்துக்கு பேருந்தில் சென்றனா். கோல்வான் கிராமம் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலை அமைப்பதற்கான கட்டுமானப் பொருள்களுடன் சென்ற சரக்கு வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. 

இதில் பேருந்தில் சென்ற புலம்பெயா்ந்த தொழிலாளா்களில் 3 பேர், பேருந்து ஓட்டுநா் உள்பட 4 பேர் உயிரிழந்தனா். அவா்களில் 2 பேர் பெண்கள். இருவரும் சத்தீஸ்கா் மாநிலம் முங்கேலியை சோந்தவா்கள். விபத்தில் காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்