கார்த்திக் சிதம்பரம் செலுத்திய ரூ.10 கோடி வைப்புத்தொகையை திருப்பி வழங்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கார்த்திக் சிதம்பரம் செலுத்திய ரூ.10 கோடி வைப்புத்தொகையை திருப்பி வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-05-13 20:43 GMT
புதுடெல்லி, 

ஏர்செல் மேக்சிஸ், ஐ.என்.எக்ஸ். மீடியா உள்ளிட்ட வழக்குகள் மீதான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள கடந்த பிப்ரவரி 14-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.

அதே சமயம் கார்த்தி சிதம்பரம் ரூ.10 கோடியை வைப்புத்தொகையாக செலுத்திவிட்டு வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டுமென சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

இந்தநிலையில் வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டு திரும்பி வந்துள்ள கார்த்தி சிதம்பரம் தன்னுடைய வைப்புத் தொகையான ரூ.10 கோடியை திரும்பத் தர சுப்ரீம் கோர்ட்டு பதிவாளருக்கு உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை நேற்று காணொலி மூலம் விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் இந்து மல்கோத்ரா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் கார்த்தி சிதம்பரத்தின் வைப்புத் தொகையான ரூ.10 கோடியை அவருக்கு திருப்பி அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் செய்திகள்