மாநில அரசுகள் நிலம் வழங்கினால் ரெயில்வே திட்டப்பணிகள் துரிதமாகும்: மக்களவையில் மந்திரி பியூஸ் கோயல் அறிவிப்பு

மாநில அரசு நிலத்தையும், அனுமதிகளையும் வழங்கினால் ரெயில்வே திட்டப்பணிகளை துரிதமாக நிறைவேற்றி முடிப்போம் என்று மக்களவையில் ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் அறிவித்தார்.

Update: 2020-03-13 22:04 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் ரெயில்வே மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு அந்த துறையின் மந்திரி பியூஸ் கோயல் நேற்று பதில் அளித்து பேசினார்.

அப்போது அவர் முந்தைய காங்கிரஸ் அரசுகள் ரெயில்வே துறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்தது, போலியான அறிவிப்புகள் வெளியிட்டு மக்களை தவறாக வழிநடத்தத்தான். அது வெறும் பலூன் மாதிரி. சபையில் கைதட்டல்கள் வாங்கத்தான் என்று சாடினார்.

1974-ம் ஆண்டில் இருந்து நிலுவையில் உள்ள ரெயில்வே திட்டங்களை அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில் கூறியதாவது:-

2013-14-ம் ஆண்டில் ரெயில்வே துறைக்கான ஒதுக்கீடு ரூ.54 ஆயிரம் கோடியாக இருந்தது. இந்த ஆண்டு, இது ரூ.1 லட்சத்து 61 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

அதிகரிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு, மிகவும் முக்கியமான மற்றும் முக்கியமான திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

தற்போதைய அரசு மிகப்பெரிய இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை அடைவதற்கு எல்லா விதமான முயற்சிகளையும் எடுக்கிறது.

6 ஆயிரம் கி.மீ. தொலைவிலான பாதையை மின்மயமாக்க இலக்கு வைத்துள்ளோம். 5,200 கி.மீ. தொலைவிலான பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. இது 2013-14-ம் ஆண்டில் 600-650 கி.மீ. தொலைவு என்ற அளவுக்குத்தான் இருந்தது.

முந்தைய காங்கிரஸ் அரசுகள் பணியாளர் ஓய்வு நிதியை வலுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2014-ம் ஆண்டு இந்த நிதி மிக குறைவாக இருந்தது. நாங்கள் அதை போதுமான அளவுக்கு உயர்த்தினோம்.

மாநிலங்களில் ரெயில்வே திட்டப்பணிகளை நிறைவேற்றுவதில் மந்தநிலை உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மாநிலங்கள் திட்டப்பணிகளுக்கான நிலத்தையும், பிற அனுமதிகளையும் கிடைக்கச் செய்து உதவினால், திட்டங்கள் துரிதமாக நிறைவேற்றப்படும் என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்