நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடைவிதிக்க கோரிய அப்பல்லோ ஆஸ்பத்திரி மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைக்கு தடை விதிக்கக்கோரியும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து 21 டாக்டர்கள் அடங்கிய நிபுணர் குழு மூலமாக விசாரிக்கக்கோரியும் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

Update: 2020-01-09 23:26 GMT
புதுடெல்லி,

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க மறுத்தது. ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக அப்பல்லோ ஆஸ்பத்திரி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அப்பல்லோ ஆஸ்பத்திரி தரப்பில் ஆஜரான வக்கீல் ரோகிணி மூசா, தங்கள் தரப்பில் எதிர் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவைப்படுவதாக கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை அடுத்த மாதம்(பிப்ரவரி) இறுதி வாரத்துக்கு ஒத்தி வைப்பதாக உத்தரவு பிறப்பித்தனர். 

மேலும் செய்திகள்