புத்தாண்டு தினத்தையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து

புத்தாண்டு தினத்தையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update:2020-01-01 09:50 IST
புதுடெல்லி,

2019-ம் ஆண்டு விடைபெற்று, நேற்று நள்ளிரவு 2020-ம் ஆண்டு பிறந்தது. புத்தாண்டை வரவேற்று சமூக வலைத்தளங்களில் மக்கள் வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர்.   புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளானோர் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினார்கள்.

இந்த நிலையில், புத்தாண்டு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு டுவிட்டரில் வாழ்த்துச்செய்தி பதிவிட்டுள்ள பிரதமர் மோடி கூறியிருப்பதாவது; “ அற்புதமான 2020 ஆண்டாக இருக்கும்! அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் செழிப்பும் மலரட்டும். அனைவரும் உடல்நலம் பெற்று, அனைவரது ஆசைகளும் நிறைவேறட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்