2 வாரங்களில் ‘பாஸ்டேக்’ மூலம் சுங்க கட்டணம் ரூ.52 கோடி வசூல்
‘பாஸ்டேக்’ மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் 2 வாரங்களில் ரூ.52 கோடி வசூலாகி உள்ளது.;
புதுடெல்லி,
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் சுங்க கட்டணத்தை ரொக்கமாக செலுத்தும்போது, கால தாமதம் ஆகிறது. இதனால், சுங்க சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
இதற்கு முடிவு கட்டுவதற்காக, மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு தீர்மானித்தது. அதற்காக, ‘பாஸ்டேக்’ வில்லைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வாடிக்கையாளர் மற்றும் வாகனம் பற்றிய விவரங்களுடன் இந்த வில்லைகளை பெற்று ‘ரீசார்ஜ்’ செய்து கொள்ள வேண்டும்.
அதை வாகனத்தின் முகப்பு கண்ணாடியில் ஒட்டிக்கொண்டு, தேசிய நெடுஞ்சாலை சுங்க சாவடிகளில் இதற்கான தனி பாதைகளில் காத்திருக்காமல் செல்லலாம். சுங்க சாவடிகளில் உள்ள மின்னணு கருவி மூலம் கட்டணம் கழித்துக் கொள்ளப்படும்.
இந்த ‘பாஸ்டேக்’ முறை, கடந்த 15-ந்தேதி நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. 2 வாரங்கள் கடந்த நிலையில், இதற்கு அமோக வரவேற்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதுவரை ஒரு கோடியே 15 லட்சம் ‘பாஸ்டேக்’ வில்லைகள் வினியோகிக்கப்பட்டுள்ளன. தினந்தோறும் ஒரு லட்சத்துக்கும்
மேற்பட்ட வில்லைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, இதன் தினசரி பயன்பாடு அதிகரித்து வருவது தெளிவாகிறது.
‘பாஸ்டேக்’ வில்லைகள் மூலம் இதுவரை நடந்த கட்டண பரிமாற்றங்கள் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டி விட்டது. அதன்மூலம், ரூ.52 கோடிக்கு மேல் வசூலாகி உள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் இந்த தகவல்களை தெரிவித்துள்ளது.