நடைப்பயிற்சி சென்ற பெண் பத்திரிகையாளரை பலாத்காரம் செய்ய முயற்சி
நடைப்பயிற்சி சென்ற பெண் பத்திரிகையாளரை பலாத்காரம் செய்ய மர்ம நபர் ஒருவர் முயற்சி செய்தார்.
சண்டிகார்,
சண்டிகாரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழக தாவரவியல் பூங்காவில் நேற்று பெண் பத்திரிகையாளர் ஒருவர் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அவரை மர்மநபர் ஒருவர் பின்தொடர்ந்து சென்றார். பின்னர் பத்திரிகையாளரிடம் வலியச்சென்று பேசினார்.
அருகிலுள்ள கற்றாழை வேலியில் அழகான பூக்கள் இருக்கின்றன, உங்கள் “செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்” எனவும் கூறினார். அவரது செயல்பாட்டில் அதிருப்தி அடைந்த பத்திரிகையாளர் “செல்போனில் உன் புகைப்படத்தை எடுத்து இருக்கிறேன், போலீசிடம் கொடுத்து விடுவேன்” என எச்சரித்தார்.
அதை பொருட்படுத்தாத அந்த நபர் பின்னால் சென்று அந்த பெண் பத்திரிகையாளரை கட்டி அணைத்து வாயை மூடி பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். உதவிக்கு யாரும் அருகில் இல்லை. அவரோடு 15 நிமிட போராட்டத்துக்குப்பின் பெண் பத்திரிகையாளர் தப்பித்து வீட்டிற்குச் சென்றார்.
நடந்தவற்றை கணவரிடம் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், மனைவியுடன் சென்று போலீசில் புகார் செய்தார். போலீசார் மர்ம நபரை தேடி வருகிறார்கள்.