மராட்டியம், அரியானா மாநிலங்களில் பாரதீய ஜனதா முன்னிலை

மராட்டியம், அரியானா மாநிலங்களில் பாரதீய ஜனதா முன்னிலை வகிக்கிறது.

Update: 2019-10-24 05:04 GMT
மும்பை,

மராட்டியம் மற்றும் அரியானா மாநிலங்களில் கடந்த 21-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 288 இடங்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 61.13 சதவீத வாக்குகள் பதிவாகின. 90 இடங்களைக் கொண்ட அரியானா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 68 சதவீத ஓட்டுகள் பதிவாகின. 

இந்நிலையில் தற்போது மராட்டியம் மற்றும் அரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

மராட்டியத்தில் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் போட்டியிட்ட தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலை  வகிக்கிறார்.

அரியானா சட்டசபை தேர்தலில்  பாரதீய ஜனதா 44 இடங்களிலும்  காங்கிரஸ் 36 இடங்களிலும் மற்றவர்கள் 11 இடங்களிலும் முன்னணியில் உள்ளனர்.

மராட்டியத்தில் பாரதீய ஜனதா கூட்டணி  197 இடங்களிலும்  காங்கிரஸ் 77 இடங்களிலும்  மற்றவர்கள் 14 இடங்களிலும் முன்னணியில் உள்ளனர்.

மேலும் செய்திகள்