கேதர்நாத் கோவிலில் தேவேந்திர பட்னாவிஸ் சாமி தரிசனம்

கேதர்நாத் கோவிலில் மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2019-10-23 16:29 GMT
மும்பை,

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு 21-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதற்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 96 ஆயிரத்து 661 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 

இந்த தேர்தலில் 60.83 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. வாக்குகள் பதிவான மின்னணு எந்திரங்கள் அனைத்தும் ‘சீல்’ வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் வைக்கப்பட்டன. அந்த மையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நாளை காலை 8 மணிக்கு  தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் மராட்டிய முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனது மனைவி அம்ருதாவுடன் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

மேலும் செய்திகள்