உயிருக்கு பாதுகாப்பு வேண்டும்; பெண் சாமியார் கோரிக்கை

உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என பெண் சாமியார் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-10-21 20:32 GMT
டேராடூன்,

அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்னும் சில நாட்களில் பிறப்பிக்கப்பட உள்ளதால் உத்தரபிரதேச மாநிலத்தில் பதற்றம் நிலவி வருகிறது. சமீபத்தில் இந்துத்துவா தலைவர்களில் ஒருவரான கமலேஷ் திவாரி லக்னோவில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்தநிலையில் இந்துத்துவா அமைப்பை சேர்ந்த பெண் சாமியார் பிராச்சி தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக கூறி மத்திய அரசிடம் பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்தார். பாதுகாப்பு கேட்டு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் விரிவாக பேசி இருப்பதாகவும் அவர் கூறினார்.

படுகொலை செய்யப்பட்ட கமலேஷ் திவாரிக்கு எதிராக முஸ்லிம் மத அடிப்படைவாதிகள் ஏற்கனவே தடை (பத்வா) பிறப்பித்து இருந்தனர். அப்போது அவர்கள், தனது ‘தலை’க்கு ரூ.51 லட்சம் பரிசு அறிவித்து இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். இதனால் தனது உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம் என்றும் ஹரித்துவாரில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 2016-ம் ஆண்டில், ‘ஐ.எஸ்.’ பயங்கரவாத அமைப்பில் இருந்தும் தனக்கு கொலை மிரட்டல் வந்திருந்ததாகவும் பேட்டியின் போது அவர் கூறினார்.

மேலும் செய்திகள்