டெல்லி அரை மாரத்தான் போட்டியில் பட்டம் வென்ற நடப்பு சாம்பியன்கள்
புதுடெல்லியில் நடந்த அரை மாரத்தான் போட்டியில் நடப்பு சாம்பியன்களான பெலிகு மற்றும் கெமெச்சு பட்டம் வென்றனர்.
புதுடெல்லி,
புதுடெல்லியில் ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் 15வது ஏர்டெல் டெல்லி அரை மாரத்தான் போட்டிகள் இன்று காலை தொடங்கின. இதனை மத்திய விளையாட்டு மந்திரி கிரண் ரிஜிஜு கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
சர்வதேச நிகழ்ச்சிக்கான தூதர் கார்மெலிட்டா ஜெட்டர் மற்றும் பலர் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் ஆடவர் பிரிவில் நடப்பு சாம்பியனான எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த ஆன்டம்லாக் பெலிகு 59.10 நிமிடங்களில் பந்தய தொலைவை கடந்து பட்டம் வென்றார்.
இதேபோன்று மகளிர் பிரிவில் நடப்பு சாம்பியனான செஹே கெமெச்சு தனது முந்தைய சாதனையை முறியடித்து 66.00 நிமிடங்களில் பந்தய தொலைவை கடந்து பட்டம் தட்டி சென்றார்.