முன்னுதாரணமாக திகழும் உண்மையான தலைவர் - கடற்கரையை சுத்தம் செய்த மோடிக்கு அமித்ஷா புகழாரம்

முன்னுதாரணமாக திகழும் உண்மையான தலைவர் என கடற்கரையை சுத்தம் செய்த மோடிக்கு அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.

Update: 2019-10-12 19:19 GMT
புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி மாமல்லபுரம் அருகே கோவளம் கடற்கரையை சுத்தம் செய்யும் காட்சியை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இதனை பார்த்த உள்துறை மந்திரி அமித்ஷா டுவிட்டர் மூலம் மோடியை புகழ்ந்துள்ளார்.

அதில் அவர், “முன்னுதாரணமாக திகழும் உண்மையான தலைவர். தூய்மை குறித்த தனது தளராத முயற்சிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். தூய்மையான மற்றும் வளமான இந்தியாவுக்கான அவரது மனஉறுதியை நாமும் மேற்கொள்வோம்” என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்