நீதிபதி தஹில்ரமானி மீது நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ.க்கு அனுமதி
சென்னை ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி தஹில்ரமானி மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியிடம் சி.பி.ஐ. அனுமதி பெற்றது.
புதுடெல்லி,
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த தஹில்ரமானி கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி மேகாலயா ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்ய கொலீஜியத்தால் பரிந்துரை செய்யப்பட்டார். இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற அவரது கோரிக்கையையும் கொலீஜியம் ஏற்கமறுத்தது.
தஹில்ரமானியை இடமாற்றம் செய்ததை எதிர்த்து சென்னையிலும், அவரது சொந்த மாநிலமான மராட்டியத்திலும் வக்கீல்கள் போராட்டம் நடத்தினார்கள்.
சுப்ரீம் கோர்ட்டு அலுவலக செயலாளர் ஜெனரல் கடந்த மாதம் 12-ந்தேதி வெளியிட்ட ஒரு அறிக்கையில், “பல்வேறு ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகள் இடமாற்றம் தொடர்பான பரிந்துரைகள் வலிமையான காரணங்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகிறது” என்று கூறப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 6-ந்தேதி தஹில்ரமானி தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார். அதன் நகலை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கும் அனுப்பினார். அவரது ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் அவர் சென்னையில் வீடு வாங்கியதிலும், பதவியில் இருந்தபோது நிர்வாக ரீதியாக எடுத்த முடிவிலும் சில முறைகேடுகள் நடந்திருப்பதாக மத்திய உளவு பிரிவான ‘சி.பி.ஐ.’, அரசுக்கு 5 பக்க அறிக்கை கொடுத்தது.
அந்த அறிக்கையின் பேரில் தஹில்ரமானி மீது விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் சி.பி.ஐ. அனுமதி கோரியது. தலைமை நீதிபதியும், தஹில்ரமானி மீது கூறப்பட்டுள்ள புகார்கள் குறித்து சட்டத்துக்கு உட்பட்டு விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு அனுமதி கொடுத்துள்ளதாக அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்துள்ளது.