‘ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கினால் எங்கும் தப்பிச் செல்லமாட்டார்’ - டெல்லி ஐகோர்ட்டில் கபில்சிபல் வாதம்
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கினால் எங்கும் தப்பிச் செல்லமாட்டார் என்று டெல்லி ஐகோர்ட்டில் அவரது வக்கீல் கபில்சிபல் வாதிட்டார்.
புதுடெல்லி,
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் டெல்லி ஐகோர்ட்டு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, கடந்த மாதம் 21-ந் தேதி அவரை சி.பி.ஐ. அவரை கைது செய்தது. ப.சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. காவல் முடிவடைந்ததை தொடர்ந்து, நீதிமன்ற காவலில் அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் அக்டோபர் 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் கடந்த 11-ந் தேதி மனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து, அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து சி.பி.ஐ. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில், ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் நேற்று காலை ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
எனக்கு எதிராக சி.பி.ஐ. ஏற்கனவே தேடுதல் நோட்டீசை பிறப்பித்து உள்ளது. என்னை ஜாமீனில் விடுவித்தால் நான் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவும், வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லவும் வாய்ப்பு இருப்பதாக சி.பி.ஐ தரப்பில் கூறப்படுவது அபத்தமானது. நான் சட்டத்தை மதிக்கும் இந்திய குடிமகன். நாடாளுமன்ற உறுப்பினர்.
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு நேரடி அன்னிய முதலீடு வந்ததில் விதிமீறல்கள் எதுவும் இல்லை. இது மக்களின் பணம் சம்பந்தப்பட்ட வழக்கோ, வங்கி மோசடி வழக்கோ, முதலீட்டாளர்களை ஏமாற்றி பணம் மோசடி செய்தது தொடர்பான வழக்கோ அல்ல.
ஒரு கொலை வழக்கு தொடர்பாக இந்திராணி முகர்ஜியிடமும் அவரது கணவரிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அப்படிப்பட்ட நிலையில் ஐ.என்.எக்.ஸ். மீடியா வழக்கில் இந்திராணி அப்ரூவராக மாறி அளித்துள்ள வாக்குமூலம் நம்பத்தகுந்தது அல்ல.
எனவே சி.பி.ஐ. மனுவில் கூறப்பட்டுள்ள அனைத்தும் தவறானது. உள்நோக்கம் கொண்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்தநிலையில், ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு நேற்று பிற்பகல் டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி சுரேஷ் குமார் கைத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல் வாதாடுகையில் கூறியதாவது:-
ப.சிதம்பரம் ஏற்கனவே 15 நாள் சி.பி.ஐ. காவலில் விசாரிக்கப்பட்டார். அதன்பிறகு ஒரு மாதமாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சி.பி.ஐ. கூறுவது போல அவர் எங்கும் தப்பிச் செல்லக் கூடியவர் அல்ல. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 4 பேர் ஏற்கனவே ஜாமீனில் உள்ளனர்.
ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு நேரடி அன்னிய முதலீடு தொடர்பாக ஒப்புதல் வழங்கியபோது அந்த வாரியத்தின் செயலாளர்களாக இருந்த 6 பேரில் ஒருவரின் மீதும் வழக்கு இல்லை. எனவே மனுதாரரை குறி வைத்து அவரை இந்த வழக்கில் தொடர்புபடுத்துவது தவறானது. உள்நோக்கம் கொண்ட செயல். அவரை மேலும் நீதிமன்ற காவலில் வைக்க எந்த முகாந்திரமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து, மனு மீதான விசாரணையை நீதிபதி இன்றைக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்தார். இன்று சி.பி.ஐ. தரப்பு வாதங்கள் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.