ரூ.21 கோடி போதைப்பொருளுடன் சிக்கிய ஆஸ்திரேலிய ஆசாமி

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில், ரூ.21 கோடி போதைப்பொருளுடன் ஆஸ்திரேலிய ஆசாமி ஒருவர் சிக்கினார்.

Update: 2019-09-22 20:14 GMT
புதுடெல்லி,

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவர் நேற்று டெல்லி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு செல்லும் ஏர் இந்தியா விமானத்தை பிடிக்க அவர் வந்தார். அவரது செயல்பாடுகள் சந்தேகம் அளிப்பதாக இருந்ததால், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் அவரை சோதனையிட்டனர்.

அப்போது, அவரது பையில் 7 கிலோ எடையுள்ள ‘அம்பீட்டமைன்’ என்ற போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து, அவரும், அந்த போதைப்பொருளும் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அந்த நபர் பெயர், முகமது உமர் துரே என்று தெரிய வந்தது. பிடிபட்ட போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.21 கோடி ஆகும்.

மேலும் செய்திகள்