ரூ.2¾ லட்சம் கள்ளநோட்டுகளுடன் காஞ்சீபுரம் ஆசாமி, கொல்கத்தாவில் கைது

ரூ.2¾ லட்சம் கள்ளநோட்டுகளுடன் காஞ்சீபுரம் ஆசாமி ஒருவர் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-09-18 20:41 GMT
கொல்கத்தா,

கொல்கத்தாவில் ஒருவர் கள்ள நோட்டுகளுடன் நடமாடுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், கொல்கத்தா சிறப்பு அதிரடிப்படை போலீசார், கொல்கத்தாவின் பெலியகடா பகுதியில் கண்காணித்து வந்தனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் ஒருவர் வந்தார்.

அவரை பிடித்து சோதனையிட்டபோது, ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் கள்ள நோட்டுகள் இருந்தன. அவர் பெயர் வி.ராஜு என்றும், தமிழ்நாட்டில் காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு கள்ள நோட்டுகள் எப்படி கிடைத்தன? கொல்கத்தாவுக்கு எதற்காக வந்தார்? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்