தேவைப்படும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும் - ஆர்.எஸ்.எஸ். கருத்து

தேவைப்படும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். கருத்து தெரிவித்துள்ளது.

Update: 2019-09-09 20:02 GMT
புஷ்கர்,

சங் பரிவார் அமைப்புகளின் 3 நாள் ஒருங்கிணைப்பு கூட்டம் ராஜஸ்தானின் புஷ்கர் நகரில் நடந்தது. இதன் இறுதி நாள் நிகழ்வுகளில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ். இணை பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபல், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இடஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதிலளிக்கும் போது, ‘நமது சமூகத்தில் சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. எனவே இடஒதுக்கீடு தேவைப்படுகிறது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள இடஒதுக்கீட்டை நாங்கள் முற்றிலும் ஆதரிக்கிறோம். பயனாளிகளுக்கு தேவைப்படும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும்’ என்று கூறினார்.

கோவில், சுடுகாடு மற்றும் நீர்த்தேக்கங்கள் போன்றவை அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்று கூறிய ஹோசபல், அவற்றை குறிப்பிட்ட சாதியினருக்கு என சுருக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்