‘‘100 நாட்கள் ஆகி விட்டன ஆனால் எந்த வளர்ச்சியும் இல்லை" - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

‘‘100 நாட்கள் ஆகி விட்டன மோடி அரசுக்கு எனது வாழ்த்துகள்” ஆனால் எந்த வளர்ச்சியும் இல்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2019-09-08 11:08 GMT
புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2-ம் முறையாக பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைவதை அக்கட்சியினர் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.  இந்நிலையில் அதனை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

இந்தநிலையில், ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

‘‘100 நாட்கள் ஆகி விட்டன. மோடி அரசுக்கு எனது வாழ்த்துகள். ஆனால் எந்த வளர்ச்சியும் இல்லை. ஜனநாயகம் வீழ்த்தப்பட்டதும், விமர்சனத்தை தவிர்க்க ஊடகங்கள் மீதான கூடுதல் அடக்குமுறையும் நடைபெறுகிறது. 

சரியான திட்டமிடலும், பயணமும் தேவைப்படும் நிலையில் அது இல்லாத தலைமையும், பொருளாதார சூறையாடலும் தான் தற்போது நடைபெறுகிறது’’ என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்